பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவை கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் சாலையில் வாகனங்கள் செல்லும் போது திடீரென நாய்கள் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிர் பலி ஏற்படும் நிலை உள்ளது. மேலும் மாணவ-மாணவிகள் சாலையில் செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.