தரமான சிலாப்கள் அமைக்க வேண்டும்

Update: 2023-12-24 11:11 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வாழக்குட்டை மற்றும் ரா.மேட்டுத்தெரு ஆகிய இரு கிராமத்தின் வழியாக செல்லும் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்கு வழி சாலை பணியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கான்கிரீட் சிலாப் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சிலாப் தரம் இல்லாமல் இப்பொழுது இடிந்து விழும் நிலையில் உள்ளது. கான்கிரீட் சிலாப் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது. உடனடியாக இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சிலாபை அகற்றிவிட்டு தரமான கான்கிரீட் சிலாப் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்