அந்தியூரில் இருந்து காலை 8.15 மணிக்கு கோவை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் பழையமேட்டூர் என்ற இடத்தில் நின்று செல்லும். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக பஸ் அங்கு நின்று செல்வதில்லை. இதனால் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பழையமேட்டூரில் பஸ் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?