கோபி-அந்தியூர் இடையே அத்தாணி வழியாக 20டி என்ற அரசு டவுன் பஸ் காலை 8.05 மணி மற்றும் மாலை 4.30 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்து வந்த பள்ளிக்கூட, கல்லூரி மாணவ-மாணவிகள், கூலித்தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் நலன் கருதி மீண்டும் 20டி டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.