பஸ் வசதி வேண்டும்

Update: 2023-12-17 14:59 GMT

தேனி, காமாட்சிபுரத்தில் இரவு நேரங்களில் போதுமான பஸ் வசதி இல்லை. மேலும் அந்த வழித்தடத்தில் இயங்கும் பஸ்கள் சில நேரங்களில் ஊருக்குள் வராமல் சென்று விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் வேலை முடிந்து வரும் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் அவதியடைகின்றனர். எனவே காமாட்சிபுரம் பகுதிக்கு இரவு நேரங்களில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்