சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-12-17 12:12 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் ஊராட்சி பகுதி மயிலாடுதுறை-பொறையாறு செல்லும் சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிவிடுகின்றனர். இதன்காரணமாக மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சாலையில் நடந்து செல்லும் மாணவ-மாணவிகளையும் கால்நடைகள் அவ்வப்போது முட்டிவிடுகின்றன. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி