அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள மழவராயநல்லூர் முதல் ஆதனூர் இடையே உள்ள மருதையாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டி முடிக்காமல் பணி மந்தமான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.