அந்தியூர் அருகே உள்ள பூனாச்சியில் இருந்து கவுந்தப்பாடி செல்வதற்கு டவுன் பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் பூனாச்சியில் இருந்து அந்தியூர் சென்று அங்கிருந்து கவுந்தப்பாடிக்கு பஸ் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக பயண நேரம், பணவிரயம் அதிகமாகிறது. எனவே கவுந்தப்பாடியில் இருந்து ஆப்பக்கூடல், அந்தியூர், நால்ரோடு வழியாக பூனாச்சிக்கு டவுன் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?