வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2023-12-10 15:05 GMT

அந்தியூர் அருகே உள்ள சத்தி ரோட்டில் சின்னதம்பிபாளையம் ஊராட்சி பழையமேட்டூர் பகுதியில் சாலை ஓரமாக சாக்கடை வடிகால் அமைக்கும் பணிக்காக ஜல்லி, மண் கொட்டப்பட்டது. ஆனால் பணி முடிவடைந்து ஒரு மாதத்துக்கு மேலாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கமுடியாமல் விபத்துகளை சந்திக்கின்றனர். உடனே ஜல்லி, மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்