அந்தியூரில் இருந்து அத்தாணி வழியாக கோபி செல்வதற்கு காலை 6.20, 6.50 மணிக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு மேல் 8.55 மணி வரை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் அத்தாணி அரசு பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 7.50 மணி மற்றும் 8.25 மணிக்கு மேற்கண்ட வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.