கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஊராட்சி செம்மடை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி சில மாதங்களாக பணிகள் முடக்கி உள்ளது. எனவே பணியை விரைந்து முடித்து கீழ் குகை வழிப்பாதையை திறந்து விட வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடித்து குகைவழிபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட்டனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.