அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து ஆர்.எஸ் மாத்தூர் செல்லும் சாலையில் இலைக்கடம்பூர் கிராமத்திற்கும் பெரியாக்குறிச்சி கிராமத்துக்கும் இடையே உள்ள சாலையின் இரு புறமும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதுடன் சாலையை ஆக்கிரமித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே சாலை ஓரங்களில் உள்ள கருவேலம் மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.