பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-12-03 11:45 GMT

அரவக்குறிச்சியில் பஸ் நிலையம் இருந்த போதிலும் அனைத்து பஸ்களும் பஸ் நிலையம் சென்று வருவது இல்லை. கரூரில் இருந்து அரவக்குறிச்சி வழியாக திண்டுக்கல் செல்லும் பஸ்களும், திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பஸ்களும், தாராபுரத்தில் இருந்து அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்களும் ஏ.வி.எம். கார்னர் பகுதியில் தான் நின்று பயணிகளை இறக்கி விட்டு மற்றும் பயணிகளை ஏற்றி செல்கிறது. ஆனால் இப்பகுதியில் ஒரு பயணியர் நிழற்குடை கூட கிடையாது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வெயிலிலும் மழையிலும் நின்று தான் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்