பெரம்பலூர் நான்கு ரோடு முதல் அரியலூர் வரையிலான நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மேடு பள்ளங்கள் உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் முன்னாள் செல்லும் வாகனத்தை முந்தி செல்லவோ, ஒதுங்கி செல்லவோ முடியாத சூழ்நிலை உள்ளது. அவ்வாறு செல்லும் போது விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.