மண்சாலையாக மாறும் தார்சாலை

Update: 2023-11-19 14:51 GMT

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி ஈரோடு -கரூர் செல்லும் மெயின் ரோட்டில் இருந்து மதுரை வீரன் நகர் பகுதிக்கு செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக தற்போது சிதிலமடைந்து தார் சாலை மண் சாலையாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்