மதுரை மாவட்டம் சத்தியசாயி நகரில் இருந்து ரோஜா தெரு செல்லும் தயா மஹால் சாலை பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?