பஸ் வசதி

Update: 2023-11-19 13:58 GMT

அந்தியூரில் இருந்து அத்தாணி வழியாக கோபி செல்வதற்கு ஏ20 அரசு டவுன் பஸ் 2012-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் இயக்கப்பட்டது. காலை 7.10 மணி முதல் இரவு 7 மணி வரை 5 முறை இயக்கப்பட்டது. இதில் பள்ளிக்கூட, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது இயக்கப்படாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். அனைவரின் நலன் கருதி மீண்டும் ஏ20 நகர பஸ்சை இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்