அந்தியூரில் இருந்து பிரம்மதேசம், பொதியமூப்பனூர் வழியாக தம்பிகலை அய்யன்கோவில் வரை இயக்கப்பட்டு வந்த மினி பஸ் கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படுவது இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பிரம்மதேசம் வழியாக டவுன் பஸ் ஒன்று இயக்க சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.