அரியலூருக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. இதில், இரவு நேரங்களில் புதிய பஸ் நிலையம் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அச்சமயங்களில் ஆட்டோக்களும் இல்லாததால் பழைய பஸ் நிலையங்களுக்கு செல்ல வேண்டுமானால் பயணிகள் நடந்து செல்லக்கூடிய சூழல் உள்ளது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலையின் ஓரம் நடந்து செல்லும்போது திருட்டு மற்றும் விபத்து ஏற்படும் சூழல் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து இரவு நேரத்தில் பஸ்களை பழைய பஸ் நிலையம் வரை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.