புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி வழியாக கீரனூரில் இருந்து கே2 என்ற அரசு பஸ் பரம்பூர்க்கு இரவு 7.40 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ் மீண்டும் பரம்பூரில் இருந்து புதுக்கோட்டை செல்கிறது. இந்த பஸ்சை முக்கண்ணாமலைப்பட்டி வழியாக புதுக்கோட்டைக்கு இயக்கினால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து புதுக்கோட்டைக்கு இரவு 8.10 தடம் 10-க்கு பிறகு இரவு 10.30 மணி வரை பஸ் வசதி இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.