பெரம்பலூர் மாவட்ட பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றி செல்லும் லாரிகளில் அதிக அளவில் பாரம் ஏற்றிச்செல்வதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த லாரிகளின் அருகே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.