போக்குவரத்து நெரிசல்

Update: 2023-11-05 10:42 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பழனியப்பன் தெரு, தலையாரி தெரு, சின்னையா தெரு, பெரிய தெரு, வடசேரி முக்கம், கைகாட்டி உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும்,அந்த வழியாக ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஆம்புலன்சுகளும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலுக்குள் சிக்கிகொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.



மேலும் செய்திகள்