அந்தியூர்-கோபி இடையே 4 டவுன் பஸ்கள் மட்டும் குறிப்பிட்ட நேரம் இயக்கப்படுகின்றன. இதேபோல அத்தாணியில் காலை 7.40 மணிக்கு டவுன் பஸ் கோபிக்கு இயக்கப்படுகிறது. அதன்பின்னர் 9.30 மணிக்கு டவுன் பஸ் இந்த வழியாக வருகிறது. இதனால் காலையிலும், மாலையிலும் ஒரே பஸ்சில் அதிக பயணிகள் ெசல்கின்றனர். படிக்கட்டிலும் தொங்கி செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காலை 8.30 மணிக்கு இந்த வழியாக அரசு டவுன் பஸ் கோபி வரை இயக்க ஈரோடு மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.