பெரம்பலூர் நகரப்பகுதியில் சில இடங்களில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.