பஸ்கள் தினசரி இயக்கப்படுமா?

Update: 2023-10-15 18:04 GMT
விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர், சிறுபாக்கம் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வரையும், திட்டக்குடியில் இருந்து ராமநத்தம், சிறுபாக்கம் வழியாக சின்னசேலம் வரை அரசு பஸ்கள் இயங்கி வந்தன. இந்த நிலையில் தற்போது இந்த பஸ்கள் தினசாி இயங்காததால் மாணவர்கள், பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி மேற்கண்ட வழித்தடங்களில் தினசரி அரசு பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்