விபத்து அபாயம்

Update: 2023-10-15 17:05 GMT

நாமக்கல் வழியாக இரவு நேரங்களில் மண் மற்றும் மணல் ஏற்றி கொண்டு செல்லும் லாரிகளில் ஒருசில லாரி டிரைவர்கள் லாரியின் மேலே தார்பாய் போட்டு மூடுவது இல்லை. இதேபோல் செங்கல் ஏற்றி செல்லும் லாரிகளிலும் சிலர் தார்பாய் போடாமல் செல்வதால் அதில் இருந்து பறக்கும் தூசி துகள்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் மணல் அல்லது செங்கல் துகள்கள் கண்களில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அனைத்து லாரிகளையும் தார்பாய் போட்டு மூடிய நிலையில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்