அம்மாபேட்டையில் இருந்து அத்தாணி செல்வதற்கு டவுன் பஸ்கள் வசதி இல்லை. புறநகர் பஸ்கள் மேட்டூர்-அந்தியூர் இடையே குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அம்மாபேட்டையில் இருந்து பவானி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பயண நேரம், பணவிரயம் அதிகமாகிறது. எனவே அத்தாணியில் இருந்து அந்தியூர், குந்துபாயூர், ஒலகடம், குட்டமேடு, புகையிலைரெட்டியூர், மும்மிரெட்டிபாளையம், பூனாச்சி, பூதப்பாடி வழியாக அம்மாபேட்டைக்கு டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.