நாகை மாவட்டம் திட்டச்சேரியில் இருந்து நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் தனியார் மற்றும் அரசு பஸ்களில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் படிகட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். மேலும், திட்டச்சேரியில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் கூட்டநெரிசல் அதிகளவில் இருந்துவருகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டச்சேரியில் இருந்து நாகை அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?