நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து 12 ‘டி’ அரசு பஸ் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு பேயோடு, சரல், ராமநாதபுரம், குருந்தன்கோடுக்கு 5.30 மணிக்கு வருகிறது. பின்னர், இதே பஸ் திங்கள்சந்தையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மேற்கூறிய வழித்தடத்தில் இயக்கப்படும். ஆனால், இந்த அரசு பஸ் சமீபகாலகமாக முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால், அந்த பகுதி பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி 12 ‘டி’ அரசு பஸ்சை சீரான முறையில் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.