நாமக்கல் நகரின் மைய பகுதியில் பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ்நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் புறநகர் பஸ்நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குறுகலான பஸ்நிலையத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே ஆக்கிரமித்து தங்களது வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு அடிக்கடி இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே பஸ்நிலைய உள்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.