கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-10-01 16:14 GMT

கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளும் கிருஷ்ணகிரி நகரையொட்டி செல்கின்றன. இந்த சாலைகளில் அடிக்கடி கால்நடைகள் குறுக்கே வந்து விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மாடுகள் சாலைகளில் அதிக அளவில் சுற்றுவதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளன. கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்து விட கூடாது என பல முறை நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியும் தொடர்ந்து சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடுகிறார்கள். எனவே சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்