கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காந்திநகர் 3-வது தெருவில் சுமார் 150-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட வாய்க்கால் பாலத்தின் அருகே கொட்டப்பட்டு இருந்த சிமெண்டு கலவைகள் பெயர்ந்து பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.