அரவக்குறிச்சி தாலுகா மலைக்கோவிலூர் அருகே உள்ள பாரதி நகரில் சுமார் 100-க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு கரூர், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். கரூரில் இருந்து அரவக்குறிச்சி பள்ளப்பட்டி வழியாக திண்டுக்கல் செல்லும் பஸ்கள் அனைத்தும் மலைக்கோவிலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து சர்வீஸ் ரோட்டில் சென்று பாரதி நகர் வழியாக சென்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை அடைகிறது. ஆனால் பஸ்கள் பாரதி நகரில் நின்று செல்வது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.