ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் இருந்து பஸ் நிலைய சந்திப்பு வரை சாலையோரம் இருபுறமும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டி உள்ளதால், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.