நாமக்கல்- நல்லிபாளையம் பைபாஸ் மேம்பாலத்தை ஒட்டி சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் குறிப்பிட்ட சில இடங்களில் மழைகாலங்களில் எப்போது பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை சேதமடைந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.