விபத்து ஏற்படுத்தும் வேகத்தடை

Update: 2023-09-24 12:55 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் ஜெயங்கொண்டம்-அரியலூர் செல்லும் முதன்மை சாலையில் அரசு வங்கி ஒன்று உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி தினமும் சிமெண்டு ஆலைகளுக்கு மின்னல் வேகத்தில் செல்லும் லாரிகளால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு இங்கு வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை மீது எவ்வித வெள்ளை நிற பட்டைகள் மற்றும் சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் அமைக்கப்படவில்லை. சாலையும், வேகத்தடையும் ஒரே மாதிரி இருப்பதால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பதை கண்டறிய முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்