போக்குவரத்து இடையூறு

Update: 2023-09-24 11:23 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி-பனங்குடி இடையிலான சாலையில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அறியாமல் வாகனங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். குவித்து வைக்கப்பட்டுள்ள மண் குவியலால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக குவித்து வைக்கப்பட்டுள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்