வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் அனைத்துத் தனியார் மற்றும் அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். மாணவர்கள் படியில் நின்றோ, தொங்கியபடியோ பயணிக்க டிரைவர்கள், கண்டக்டர்கள் அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பாக வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தி.திராவிடன், வேலூர்.