காட்பாடி பாகாயம் இடையே 21 அரசு டவுன் பஸ் கள் இயக்குவதாக தெரிகிறது. இவைகள் பௌர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் திருவண்ணாமலை மற்றும் மேல்மலையனூர் செல்வதற்காக பல டவுன் பஸ் கலை சிறப்பு பேருந்துகளாக மாற்றி விடுகின்றனர். கடந்த ஆறாம் தேதி டவுன் பஸ்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட வேண்டி இருந்தது. இத்தருணத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் பல வேலூரில் இருந்து ஓடை பிள்ளையார் கோயில், ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும் என்று பயணிகளை சிரமப்பட வைக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?
-குமார், காட்பாடி.