காட்பாடி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் எந்த ஒரு பஸ்சும் நிற்பதில்லை. இதனால் கோர்ட்டு, தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் கிளித்தான்பட்டரை பஸ் நிறுத்தத்தில் இறங்கி வரவேண்டிய நிலை உள்ளது. இது குறித்து மண்டல போக்குவரத்து அலுவலர், அரசு போக்குவரத்துக்கழக அலுவலர் காட்பாடி தாலுகா அலுவலகம் எதிரே பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஒ.ஜெ.கதிர்வேல், வேலூர்.