பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்

Update: 2023-09-24 12:39 GMT

வேலூரில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், தாம்பரம் செல்லும் எந்த ஒரு பஸ்சும் காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்வதில்லை. பயணிகள், பொதுமக்கள் பஸ்சில் ஏறுவதற்காக பஸ் நிலையத்தில் இருந்து வெளியே ஓடுவதும், வெளியே இறக்கி விடும் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் ஓடுவதுமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக குழந்தைகளுடனும், மூட்டை முடிச்சுகளுடனும் வரும் பயணிகளின் பாடு திண்டாட்டமாக உள்ளது. காவேரிப்பாக்கமாக செல்லும் அனைத்துப் பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல வேண்டும்.

-டி.ஜெகதீசன், காவேரிப்பாக்கம். 

மேலும் செய்திகள்