வேலூர் மாவட்டம் திருமணி கிராமத்தில் இருந்து தினமும் ஏராளமான பள்ளி மாணவர்கள் வேலூருக்கு செல்ல அதிகாலை 5 மணிக்கு அரசு பஸ் ஒன்றும், காலை 7 மணிக்கு தனியார் பஸ் ஒன்றும் உள்ளது. போதிய பஸ் வசதி இல்லாததால் எங்களால் பள்ளிக்கு செல்ல சிரமமாக உள்ளது. மாலையில் வேலூரிலிருந்து 4.20 மணிக்கு ஒரு அரசு பஸ்சும், மாலை 6.30 மணிக்கு ஒரு தனியார் பஸ்சும் உள்ளது. இதனால் நாங்கள் வேலூரில் இருந்து வீடு திரும்ப சிரமப்படுகிறோம். எனவே அரசு பஸ்சை காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும், தனியார் பஸ் காலை 7 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பள்ளி மாணவர்கள், திருமணி.