ஆற்காடு பணிமனையில் இருந்து தடம் எண்:487 என்ற பஸ் வேலூரில் இருந்து அரக்கோணம் வரை பாணாவரம் வழியாக காலை மற்றும் மாலை என 2 தடவை இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு அந்தப் பஸ்இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழகம் நடடிவக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், ஆற்காடு முதல் பாணாவரம் வரை இயக்கப்படும் 7டி என்ற பஸ்சை போளிப்பாக்கம் வரை நீட்டித்து இயக்க வேண்டும், எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ர.சுரேஷ், போளிப்பாக்கம்.