காட்பாடியில் இருந்து வேலூர் வரும் பாலத்தில் சமீபத்தில் நடைபாதைகள் அமைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் அச்சமின்றி நடப்பதற்காக இரும்பிலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. காட்பாடி பகுதி பாலத்தின் ஓரம் உள்ள தடுப்பு கம்பிகளை மர்ம நபர்கள் உடைத்து எடுத்துள்ளனர். இதனால் அதில் சிறிது தூரம் தடுப்பு கம்பிகள் இன்றி காணப்படுகிறது. அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரும்பு தடுப்புகளை மீண்டும் அமைத்து, மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.