அதிகமான பயணிகளை ஏற்றும் ஆட்டோக்கள்

Update: 2023-02-05 17:40 GMT

திருப்பத்தூர் நகரில் பஸ் நிலைய சாலைகளில் ஷேர் ஆட்டோக்களில் பள்ளி மாணவ, மாணவிகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றி செல்கின்றனர். ஆட்டோக்களில் அமர கூட இடம் இல்லாமல் நெருக்கடியில் செல்கிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. திருப்பத்தூர் நகரில் வலம் வரும் ஷேர் ஆட்டோக்களிலும், பயணிகள் ஆட்டோக்களிலும் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்களை ஏற்றுவோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜியாவுதீன், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி