கிருஷ்ணகிரி நகரில் ஐந்து ரோடு முக்கிய சந்திப்பாக உள்ளது. இங்கிருந்து செல்லும் கிளை சிறை சாலையிலும், சேலம் சாலையிலும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் கனரக வாகனங்களை நிறுத்தி சரக்குகளை இறக்கப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த 2 சாலைகளிலும் போக்குவரத்து பிரிவு போலீசார் அதிகளவில் கண்காணித்து சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.