தஞ்சையில் இருந்து வடுவூர் வழியாக மன்னார்குடி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ-மாணவிகள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் கூட்ட நெரிசலிலும், பஸ் படிக்கட்டிலும் பயணம் செய்கின்றனர். இதனை தவிர்க்க மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?