பரங்கிப்பேட்டையிலிருந்து சி.முட்லூர், பி.முட்லூர் வழியாக சிதம்பரத்துக்கு குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்சில் அமர இடமில்லாமல் பொதுமக்கள் பஸ் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.