நாகை மாவட்டம், காடம்பாடி பப்ளிக் ஆபிஸ் சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே கூட்டமாக படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக மேற்கண்ட சாலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?