நாகூரில் இருந்து திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல காலை, மாலை நேரங்களில் குறைவான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்சில் எப்போதும் கூட்டநெரிசல் அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக மாணவ-மாணவிகள் தினமும் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்று வருகின்றனர். இதனை பார்க்கும் பொதுமக்கள், பெற்றோர்கள் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?